குறைந்த அளவிலேயே பணியாளர்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது


குறைந்த அளவிலேயே பணியாளர்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது
x

குறைந்த அளவிலேயே பணியாளர்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.

கோவை,

கோவை, சென்னை, மதுரை மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் முக்கிய அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் மிக குறைந்த அளவிலான பணியாளர்கள் வந்திருந்தனர். அவர்களும் முகக்கவசம் அணிந்தபடி பணிபுரிந்தனர். பெரும்பாலான பணியாளர்கள் வராததால் கலெக்டர் அலுவலகத்தில் பல பிரிவுகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி பூட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது:-

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக 33 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று அரசு அறிவித்து இருந் தது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் வந்திருந்தனர். நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டியது இருந்ததால் வருவாய் துறை, ஊரக துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிகமாக அரசு அலுவலகங்களுக்கு வருவது இல்லை. பெரும்பாலான பணிகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story