கோவையில், தெருக்களை போலீசார் அடைத்து வைத்துள்ளதால் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு வினியோகம் செய்ய முடியாமல் பணியாளர்கள் அவதி
கோவையின் பல்வேறு பகுதிகளில் தெருக்களின் நுழைவு வாயில்களை போலீசார் அடைத்துள்ளதால், சமையல் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு வினியோகம் செய்ய முடியாமல் பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை,
ஊரடங்கையொட்டி கோவை மாநகரில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அந்த தெருவுக்கு யாரும் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
கடும் அவதி
ஆனால் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளிலும் போலீசார் இதுபோன்று தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் நடந்து வெளியே வரக்கூட முடியாத அளவிற்கு சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் அந்த பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சமையல் கியாஸ் சப்ளை செய்பவர்கள் சிலர் கூறியதாவது:-
கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளிலும் போலீசார் தடுப்புகளை வைத்துள்ளனர். உதாரணத்துக்கு ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் சாலையில் இரண்டு பக்கமும் உள்ள அனைத்து குறுக்கு சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர். அந்த பகுதியில் கொரோனாவினால் யாரும் பாதிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது அந்த பகுதியையும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி போல மாற்றப்பட்டுள்ளன. இதே போல கோவையின் பல்வேறு பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
உயிரை பணயம் வைத்து...
இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு செல்வது மிகவும் கஷ்டமாக உள்ளது. இருசக்கர வாகனம் அல்லது ஆட்டோவை மெயின் ரோட்டில் நிறுத்தி விட்டு 500 அடி தூரத்தில் உள்ள வீட்டுக்கு சிலிண்டரை கொண்டு செல்வது சாதாரண காரியம் இல்லை. குறைந்தபட்சம் இரு சக்கர வாகனம் செல்லக்கூடி அளவிற்காவது இடம் விட்டு தடுப்புகளை போலீசார் அமைத்திருக்கலாம்.
நாங்கள் சீருடை அணிந்திருக்கிறோம். அடையாள அட்டை உள்ளன. அப்படியிருக்கும் போது அத்தியாவசிய தேவையான கியாஸ் சிலிண்டரை கொண்டு செல்பவர்களுக்கு இடம் விட்டு தடுப்புகளை அமைக்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் கியாஸ் சிலிண்டர்களை கொண்டு செல்லும்போதும் போலீசார் நிறுத்தி பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள். நாங்கள் அத்தியாவசிய பணிக்காகத் தான் செல்கிறோம் என்று சொல்லியும் எங்களை மரியாதைக்குறைவாக நடத்துவது ஏன் என்று தெரியவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் உள்ள பகுதிகளுக்குள் நாங்கள் சென்று சிலிண்டர்களை வினியோகித்து உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறோம். ஆனால் அதை அங்கீகரிக்கவில்லையென்றாலும் எங்களை அலட்சியப்படுத்தாமல் இருந்தாலே போதுமானது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தனித் தீவு போல...
அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:-
தெருவின் நான்கு பக்கமும் தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்துள்ளனர். இதனால் அவசர தேவைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத அளவிற்கு தனித் தீவு போல உள்ளது. இருசக்கர வாகனத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தடுப்பான்களை போலீசார் அமைத்திருந்தாலும் அவசிய தேவைக்காக செல்பவர்கள் அந்த தடுப்பானை திறந்து செல்லும் அளவிற்கு போலீசார் அனுமதிக்க வேண்டும்.

Related Tags :
Next Story