பிரதமர் மோடி காணொலி காட்சியில் ஆலோசனை: பசுமை மண்டல பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை


பிரதமர் மோடி காணொலி காட்சியில் ஆலோசனை: பசுமை மண்டல பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை
x
தினத்தந்தி 28 April 2020 5:48 AM IST (Updated: 28 April 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

பசுமை மண்டல பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டு கோள் விடுத்தார்.

பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற 3-ந் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்தபடி கலந்து கொண்டார்.

இதில் மந்திரிகள் ஸ்ரீராமுலு, சுதாகர், சுரேஷ்குமார், பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எடியூரப்பா, கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவை கட்டுக்குள் இருப்பதாகவும், கொரோனா பரவாத பசுமை மண்டல பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம், கொரோனா விஷயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதில் வருகிற 3-ந் தேதிக்கு பிறகு கொரோனா பாதிக்காத 9 மாவட்டங்களை உள்ளடக்கிய பசுமை மண்டலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாகவும், அங்கு வைரஸ் பரவுவதை தடுக்கவும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடியூரப்பா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Next Story