நெல்லையில் 3 சலூன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நெல்லை மாநகர பகுதியில் 3 சலூன் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியில் 3 சலூன் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
சலூன் கடைகள்
நெல்லை மாநகர பகுதியில் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பால், காய்கறி, மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சலூன் கடைகளை திறக்க வேண்டாம் என ஏற்கனவே நெல்லை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதையும் மீறி திறந்த சலூன் கடைகள் ‘சீல்‘ வைக்கப்பட்டன. இதுவரை 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன.
3 கடைகளுக்கு ‘சீல்’
நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள சில சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி சில கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் எச்சரிக்கையை மீறி திறந்து இருந்த சலூன் கடைகளுக்கு ‘சீல்‘ வைக்குமாறு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து சுகாதார அலுவலர்கள் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். பாளையங்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஒரு சலூன் கடையை சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் ‘சீல்‘ வைத்தனர்.
அதேபோல் வண்ணார்பேட்டையில் திறந்து இருந்த ஒரு சலூன் கடையை சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலும், நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள ஒரு சலூன் கடையை சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் ஊழியர்கள் ‘சீல்‘ வைத்தனர். நேற்று ஒரே நாளில் 3 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story