கல்லிடைக்குறிச்சி அருகே பலத்த சூறைக்காற்றுடன் மழை; வாழைகள் நாசம்
கல்லிடைக்குறிச்சி அருகே பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏராளமான வாழைகள் நாசமாயின.
அம்பை,
கல்லிடைக்குறிச்சி அருகே பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏராளமான வாழைகள் நாசமாயின.
சூறைக்காற்றுடன் மழை
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கசமுத்து (வயது 70). இவரது தோட்டத்தில் தற்போது 600-க்கும் மேற்பட்ட சக்கை ரக வாழை பயிரிட்டு இருந்தார். சுமார் 500 வாழைகள் குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் குலை தள்ளிய நிலையில் காணப்பட்ட 500 வாழைகள் முறிந்து விழுந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இழப்பீடு வழங்க வேண்டும்
இதுகுறித்து விவசாயி கசமுத்து கூறுகையில், “அக்கம் பக்கத்திலும், வங்கியிலும் கடன் வாங்கி வாழை பயிரை காப்பாற்றி வந்தேன். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தால் குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைகள் ஒடிந்து விழுந்து எனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story