ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்
ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்
முக்கூடல்,
முக்கூடலில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கொரோனா வைரஸ்
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டைவிட்டு வெளியே வருமாறும், தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க தினமும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் பொதுமக்கள் முககவசம் அணிந்து இருப்பதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றித் திரிபவர்களை போலீசார் கண்காணித்து வழக்குப்பதிவு செய்வது, வாகனங்கள் பறிமுதல், கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதனையும் மீறி சுற்றித்திரிபவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி வருகின்றனர்.
நூதன தண்டனை
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் அத்தியாவசிய தேவையில்லாமல் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை முக்கூடல் போலீசார் பிடித்து அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கினர்.
அதாவது, கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனரை கைகளில் ஏந்தச் செய்து ஊர் முழுவதும் வலம் வர செய்தனர். அவர்களுக்கு அறிவுரை கூறியது மட்டுமன்றி, பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான போலீசாரின் இந்த நடவடிக்கையை ஊர் மக்கள் பெரிதும் பாராட்டினர்.
Related Tags :
Next Story