சலவைத்தொழிலாளர்கள், முடித்திருத்துவோர் 1,389 பேருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அமைச்சர் வழங்கினார்
சலவைத்தொழிலாளர்கள், முடித்திருத்துவோர் 1,389 பேருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அமைச்சர் வழங்கினார்.
ஆரணி,
ஆரணி சட்டமன்ற தொகுதியில் சலவைத் தொழிலாளர்கள், முடித் திருத்துவோர், தவில், நாதஸ்வர இசை கலைஞர்கள் பலர் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் தனித்தனியாகக் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை பரிசீலனை செய்த அமைச்சர், ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் சலவைத்தொழிலாளர்கள், முடித் திருத்துவோருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் வழங்கி பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:-
ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி நகரில் ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் பேருராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சலவைத் தொழிலாளர்கள் 688 பேருக்கும், முடித்திருத்துவோர், நாதஸ்வரம், தவில் வாசிக்கும் கலைஞர்கள் 701 பேர் என மொத்ததம் 1,389 பேருக்கு மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதேபோல் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 3 பேரூராட்சிகள், ஆரணி, செங்கம் என 2 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்கள் சேர்த்து மொத்தம் 2,818 பேருக்கும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் உள்ள செய்யாறு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,400 பேருக்கும் என ஆக மொத்தம் 5,218 பேருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட கூட்டுறவு பண்டக சாலைத் தலைவர் கஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் வேலு, ஒன்றிய கவுன்சிலர் கவுரிபூங்கானம், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முர்த்தி, திலகவதி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story