அம்மாபாளையம் ஊராட்சியில் காட்சி பொருளான குப்பை தொட்டிகள்
அம்மாபாளையம் ஊராட்சியில் குப்பை தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன.
பெரம்பலூர்,
அம்மாபாளையம் ஊராட்சியில் குப்பை தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன.
அம்மாபாளையம் ஊராட்சி
பெரம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தாததால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மீறப்பட்டு வருகிறதாம். பல தெருக்களில் சேதமடைந்த குப்பை தொட்டிகளே உள்ளது. ஊராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட குப்பை தொட்டிகள் பயன்பாடில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காட்சி பொருட்களாகவே உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெயரளவுக்கே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறதாம். ஊரடங்கு உத்தரவினை மீறி பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடத்தில் சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மாபாளையம் கிராம ஊராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
களரம்பட்டியில்...
இதேபோல் அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராம ஊராட்சியில் அரசின் ஊரடங்கு உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு வருகிறது. அந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தூய்மை பணிகளும் சரிவர மேற்கொள்ளப்படவில்லையாம். இதனால் தெருக்களிலும், சாலையோரங்களிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் எந்நேரமும் சுற்றித்திரிகின்றனர். டீக்கடை, அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வருகின்றனராம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story