திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 2 மகன்களை சொந்த ஊருக்கு சைக்கிளில் அழைத்து சென்ற தொழிலாளி
விழுப்புரம் மாவட்டம், சிறு மதுரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. கரும்பு வெட்டும் தொழிலாளி.
பெரம்பலூர்,
விழுப்புரம் மாவட்டம், சிறு மதுரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மகன்களான சபரேஷன்(வயது 11), யுவராஜ் (9) ஆகியோர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தங்கமணியின் அக்காள் வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டதாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் சபரேஷனும், யுவராஜூம் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனால் அவர்களது தந்தை தங்கமணி தனது 2 மகன்களையும் அழைத்து வர 200 கிலோ மீட்டர் தூரமுள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு சொந்த ஊரில் இருந்து சைக்கிளிலே சென்றார். பின்னர் தனது 2 மகன்களையும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்காள் வீட்டில் இருந்து சைக்கிளில் அழைத்து கொண்டு தங்கமணி சிறு மதுரைக்கு புறப்பட்டார். பூண்டி, லால்குடி வழியாக பெரம்பலூர் வந்த அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கி வழி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு தங்கமணி தனது மகன்களுடன் சொந்த ஊருக்கு சென்றடைந்தார்.
Related Tags :
Next Story