குடிநீர் குழாய் இணைப்பில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் குழாய் இணைப்பில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 April 2020 11:28 AM IST (Updated: 28 April 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டில் இருந்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம், 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப நகராட்சியால் அனைவருக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் தங்களுடைய குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்சார மோட்டார்களை பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பதாக, பொதுமக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நகராட்சி ஆணையர் அறச்செல்வி அறிவுறுத்தலின் பேரில், நகராட்சி பொது மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், சேவக தெரு உள்பட ஜெயங்கொண்டம் பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் குடிநீர் குழாயில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டு மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்களை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.


Next Story