பொதுமக்களுக்கு காய்கறிகள்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்


பொதுமக்களுக்கு காய்கறிகள்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
x
தினத்தந்தி 29 April 2020 5:00 AM IST (Updated: 29 April 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

பாகலூரில் பொதுமக்களுக்கு காய்கறிகளை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

ஓசூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி போக்குவரத்தும் முடக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களது விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறி வகைகளை ஓசூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி இதுவரை 500 டன்களுக்கும் அதிகமாக கொள்முதல் செய்து ஓசூர் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நாள்தோறும் வினியோகம் செய்து வருகிறார். அந்த வகையில், ஓசூர் அருகே பாகலூரில் பாலகிருஷ்ணரெட்டி தலைமையில், பொதுமக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான தக்காளி, முட்டை கோஸ், கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இதேபோல் ஓசூர் அருகே காரப்பள்ளியிலும் பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி.ஜெய்ராம், மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி, ஓசூர் நகர துணை செயலாளர் கே.மதன், ஒன்றிய கவுன்சிலர் உமா குணசேகர், மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story