ஊரடங்கை மீறுபவர்களை அலறவிடும் ஆளில்லா குட்டி விமானம்
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை ஆளில்லா குட்டிவிமானம் அலறவிட்டு வருகிறது.
கோவை,
கோவையில் ட்ரோன் (ஆளில்லா குட்டிவிமானம்) என்ற சொல் தற்போது கிராமப்புற இளைஞர்கள் மத்தியிலும் அச்சுப்போன்று பதிந்து உள்ளது. திருமண நிகழ்ச்சிகள், முக்கிய நபர்கள் வரும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பது போன்ற முக்கிய வேலைக்காக மட்டுமே ஆளில்லா குட்டிவிமானத்தை வானில் பறக்கவிட்டு, அதன் மூலம் கண்காணிப்பது வழக்கம்.
இதனால் நகரப்புறத்தில் இந்த ஆளில்லா விமானத்தை பலரும் பார்ப்பது சகஜம். ஆனால் சிறு கிராமங்களில் கூட ஆளில்லா குட்டிவிமானம் பற்றி நன்கு தெரிந்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம், ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் ஆளில்லா குட்டிவிமானங்களை பறக்கவிடுவதுதான்.
அலறிஅடித்து ஓடும் இளைஞர்கள்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் இந்த உத்தரவை ஒரு சிலர் மீறி, தேவையின்றி ஊர் சுற்றி வந்தனர். ஒதுக்குப்புறமான இடங்களில் கிரிக்கெட், கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வந்தனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் பல வழிமுறைகளை கையாண்டும் பலன் இல்லாமல்போனது. இதையடுத்து போலீசாருக்கு கை கொடுத்ததுதான் ஆளில்லா குட்டி விமானம்.
இதனை பறக்க விட்டு, அதில் உள்ள கேமரா மூலம் கண்காணிக்க தொடங்கியபோதுதான், ஒளிவு மறைவான இடங்களில் நடக்கும் விதி மீறல்கள் பளிச்சென்று தெரியவந்தது. மாவட்டத்தின் பல இடங்களில் இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. குட்டி விமானத்தை பார்த்ததும், போலீசார் நம்மை பார்த்து விட்டார்கள் என்ற அச்சம் காரணமாக ஆங்காங்கே விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓட்டம்பிடித்ததை பல இடங்களில் காணமுடிந்தது.
குறைந்தது
குட்டி விமானத்தின் பார்வையில் சிக்கி, போலீசில் மாட்டிக்கொண்டால் தண்டனையை அனுபவிக்க வேண்டியது வரும் என்ற பயம் காரணமாக, தெருக்களில், வயல்வெளிகளில், ஒதுக்குப்புறங்களில் விளையாடுவதை பலர் கைவிட்டுவிட்டனர். இதனால் ஊரடங்கை மீறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று போலீசார் தெரிவிக்கிறார்கள்.

Related Tags :
Next Story