உத்தமபாளையம் பகுதியில் சூறைக்காற்றுக்கு முறிந்து விழுந்த வாழை மரங்கள்
உத்தமபாளையம் பகுதியில் சூறைக்காற்றுக்கு முறிந்து விழுந்த வாழை மரங்கள்.
உத்தமபாளையம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உத்தமபாளையம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்குகிறது. இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் அப்பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பச்சை வாழை, செவ்வாழை, நேந்திரம் உள்ளிட்ட ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் விவசாய பணிகள் முடங்கிப் போயுள்ளது. ஏற்கனவே விளைந்த வாழைத்தார்களுக்கு போதிய விலை இல்லை. இந்த நிலையில் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story