மணப்பாறையில் போலீசாரின் அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள் கொரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும் என அச்சம்


மணப்பாறையில் போலீசாரின் அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள் கொரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும் என அச்சம்
x
தினத்தந்தி 29 April 2020 8:50 AM IST (Updated: 29 April 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறையில், போலீசாரின் அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

மணப்பாறை, 

மணப்பாறையில், போலீசாரின் அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிப்பவர்களால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

அனுமதி கடிதம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இதைத்தொடர நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், அரசிடம் இ-பாஸ் பெற்று அதன் பின்னரே செல்ல முடியும். அதுவும் இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட மிக முக்கிய தேவைகளுக்காக மட்டுமே பெற்றுச் செல்ல முடியும். இதை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து மட்டுமே பெற முடியும்.

ஆனால் தற்போது மணப்பாறை பகுதியை சேர்ந்த பலரும், போலீஸ் நிலையத்தில் போலீசாரின் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொண்டு சென்னை, தேனி என பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு கொடுக்கப்படும் கடிதத்தில், எத்தனை நபர்கள் செல்கின்றனர்? அவர்களின் பெயர், செல்போன் எண் என எந்த தகவலும் இல்லை என்பதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் அனுமதி கடிதத்தின் நகலை கூட போலீஸ் நிலையத்தில் வாங்கி வைப்பதில்லை.

பொதுமக்கள் அச்சம்

இதுபோன்ற அனுமதியை மாவட்ட நிர்வாகம் மட்டுமே வழங்க முடியும் என்ற நிலையில், தற்போது மணப்பாறை போலீசாரே வழங்குவது கொரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும் என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இதுபோன்று போலீசார் அனுமதி கடிதம் கொடுக்கலாமா? 144 தடை உத்தரவு உள்ள நிலையில், எப்படி அனுமதி கடிதம் கொடுக்க முடியும்? என விசாரணை நடத்தி, போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story