குளித்தலையில் சூறைக்காற்றால் சாலையில் விழுந்த புளியமரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி


குளித்தலையில் சூறைக்காற்றால் சாலையில் விழுந்த புளியமரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 29 April 2020 9:10 AM IST (Updated: 29 April 2020 9:10 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில், சூறைக்காற்றால் சாலையில் புளியமரம் விழுந்தது. மேலும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

குளித்தலை, 

குளித்தலையில், சூறைக்காற்றால் சாலையில் புளியமரம் விழுந்தது. மேலும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சாலையில் விழுந்த மரம்

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குளித்தலை பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், நேற்று மாலையும் குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதையடுத்து லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இந்த பலத்த சூறைக்காற்றில் குளித்தலை பகுதியில் சில இடங்களில் மரக்கிளைகள் ஆங்காங்கே ஒடிந்து விழுந்தன. மேலும், குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரம் அடியோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

மின்தடை

இதை அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பலத்த காற்றின் காரணமாக குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு மின்தடையை சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Next Story