அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா அவசர கால உதவி எம்.எல்.ஏ. வழங்கினார்


அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா அவசர கால உதவி எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 29 April 2020 9:42 AM IST (Updated: 29 April 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா அவசர கால உதவி சு.ரவி எம்.எல்.ஏ. வழங்கினார்.

அரக்கோணம்,

அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் நகரம், ஒன்றியம், நெமிலி ஒன்றியம், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கொரோனா ஊரடங்கு அவசர கால உதவியாக அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். சாதி, மதபேதமில்லாமல் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு அரிகிலபாடி பள்ளிவாசல் அருகே, அரக்கோணம் மசூதி அருகே, எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே அவசர கால உதவி பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

மேலும் முடித்திருத்தும் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு ஊழியர்கள், அம்பேத்கர்நகர் பகுதி மக்கள், இருளர் காலனியில் வசிப்போர் என பலருக்கும் கொரோனா ஊரடங்கு அவசர கால நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நகர வங்கி தலைவர் ஷியாம்குமார், வக்கீல் பிரகதீஸ்வரன், அரக்கோணம் நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அருள்மூர்த்தி, யோகானந்த், நரசிம்மன், செல்வம், சரவணன், ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுவரை 5 ஆயிரம் பேருக்கு கொரோனா ஊரடங்கு அவசர கால உதவி பொருட்களை சு.ரவி.எம்.எல்.ஏ. தன்னுடைய சொந்த செலவில் வழங்கி உள்ளார். ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து உதவி பொருட்கள் வழங்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


Next Story