காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது


காரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2020 11:28 AM IST (Updated: 29 April 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

சாராயத்தை விற்பனை செய்ய காரில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

சாராயத்தை விற்பனை செய்ய காரில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன தணிக்கை

ஊரடங்கு உத்தரவினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுகிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை தலை தூக்குவதாக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம், பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

2 பேர் கைது

அதில் 6 லிட்டர் சாராயம் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வேப்பந்தட்டை தாலுகா மங்களமேட்டை சேர்ந்த ரவிராஜா (வயது 38), பெரம்பலூர் தாலுகா செங்குணத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் முத்தரசன்(30) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சாராயம் வாங்கி கடத்தி வந்து ஒரு லிட்டர் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததும், கூகுள் பே-யில் முகவரியை பதிவு செய்து தேவைக்கான தொகையை செலுத்தியவர்களுக்கு சாராயத்தை வீட்டிற்கு வந்து கொடுத்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிராஜா, முத்தரசன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Next Story