அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய ஆசிரியைகள் நெகிழ்ந்துபோன பெற்றோர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், தூப்பாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், தூப்பாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 62 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணகி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரோடு பரமேஸ்வரி என்ற உதவி ஆசிரியை பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
தூப்பாபுரம் கிராமம் முழுவதும் பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களே வசித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டுவந்த அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியை கண்ணகி நினைத்தார். ஆனால் கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் உதவும் பொருளாதார சூழல் இல்லை என்பதால் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடும்பங்களுக்கு மட்டுமாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்தார். உதவி ஆசிரியை பரமேஸ்வரியை அழைத்து பேசியபோது, தங்கள் மாணவ- மாணவிகளின் 41 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முடிவெடுத்தனர்.
அதன்படி தலைமை ஆசிரியை கண்ணகி ரூ.36 ஆயிரமும், உதவி ஆசிரியை பரமேஸ்வரி ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.41 ஆயிரத்தை மாணவ- மாணவிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பெற்றோர்களிடம் வழங்கினர். இதனால் மாணவர்களின் பெற்றோர் நெகிழ்ந்து போனார்கள்.
Related Tags :
Next Story