கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமான பணிகள் தொடங்கியது
ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைந்துள்ளது.
கூடங்குளம்,
ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கு ரஷ்ய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். மேலும் 3, 4-வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வந்தன. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.
இந்தநிலையில் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிலவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் விவசாய பணிகள், கட்டுமான பணிகள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகள் மற்றும் சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகளுக்கு ஊரடங்கு தளர்வை அரசு அறிவித்தது.
அதன்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story