தேளூரில் உணவின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்


தேளூரில் உணவின்றி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 30 April 2020 12:15 PM IST (Updated: 30 April 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

தேளூரில் வடமாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

வி.கைகாட்டி, 

தேளூரில் வடமாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

தொழிலாளர்கள்

கடந்த ஜனவரி மாதம் மராட்டிய மாநிலத்தில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் சர்க் கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டும் பணிக்கு அரியலூர் வந்தனர். அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஊருக்கு ஒரு குழுவாக பிரிக்கப்பட்டு 40 பேர் வீதம் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் கரும்புவெட்ட வந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணி பாதிப்பால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வயல்வெளியில் தங்கி உள்ளனர். மேலும் இங்கு தங்கியுள்ள தொழிலாளர்கள் அடிக்கடி தேளூர் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா பரவிவிடுமோ? என்ற அச்சம் அப்பகுதி மக்கள் இடையே நிலவி வருகிறது.

உணவின்றி...

இது குறித்து வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- இங்கு நாங்கள் 40 பேர் தங்கியுள்ளோம். மழை பெய்யும்போது ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். மேலும் கடந்த சில நாட்களாக எங்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காமலும், உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் இந்த காட்டுப்பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல வழி தெரியாமலும் தவித்து வருகிறோம். இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் வருவதால் அச்சத்துடன் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு முறையான உணவு வழங்குவதோடு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story