3 மாவட்டத்திலும் புதிதாக தொற்று இல்லை: கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் தூத்துக்குடி
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. நெல்லை, தென்காசியில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பேர் முழுமையாக குணமடைந்து ஏற்கனவே வீடு திரும்பி விட்டனர். ஒரு மூதாட்டி இறந்து உள்ளார்.
ஒருவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாற உள்ளது.
அதே நேரத்தில் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை கொரோனாவால் மொத்தம் 63 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மீதமுள்ள 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று களக்காட்டை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். மற்ற 9 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நேற்று 7-வது நாளாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை.
தென்காசி
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 2 பேர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 34 பேரில் நேற்று முன்தினம் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று தென்காசியை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
தென்காசி மாவட்டத்திலும் நேற்று புதிதாக நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. அங்கு கடந்த 5 நாட்களாக இதே நிலை நீடிக்கிறது. 3 மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி வருவதாலும், புதிதாக நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதும் மக்களிடையே நிம்மதியை அளித்து உள்ளது.
Related Tags :
Next Story