பண்ருட்டி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர பொடி


பண்ருட்டி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர பொடி
x
தினத்தந்தி 1 May 2020 3:23 AM IST (Updated: 1 May 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர பொடி.

பண்ருட்டி,

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ பிரிவின் சார்பில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜகுமாரன் வழிகாட்டுதலின் படி கொரோ னா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பண்ருட்டி நகராட்சி அலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர பொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பண்ருட்டி நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராம்சுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் 250 பேருக்கு கபசுர பொடி வழங்கப்பட்டது. இதில் என்ஜினீயர் சிவசங்கரன், மேலாளர் இளங்கோவன், துப்பரவு அலுவலர் பாக்யநாதன், ஆய்வாளர் ஜெயச்சந்திரன், களப்பணி உதவியாளர் சீனுவாசன், பண்ருட்டி சித்தா உதவி மருத்துவ அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story