முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் 810 குடும்பங்களுக்கு அரிசி - முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.
முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் 810 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அரிசி வழங்கினார்.
சேவூர்,
முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூலக்குரும்பபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு 810 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கினார்.
இதில் அவினாசி ஒன்றிய குழு தலைவர் அ.ஜெகதீசன், முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரவிக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.கே.கனகராஜ், சேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு, சூர்யா கார்டன் கருப்பசாமி, ஏ.ஆர்.கே.கார்த்தி, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு ஷாஜகான், பாண்டி, ஹரிகரன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story