உளுந்தூர்பேட்டையில் காய்கறி சந்தை இடமாற்றம்


உளுந்தூர்பேட்டையில் காய்கறி சந்தை இடமாற்றம்
x
தினத்தந்தி 1 May 2020 3:52 AM IST (Updated: 1 May 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் காய்கறி சந்தை இடமாற்றம்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால், அங்கு தற்காலிகமாக இயங்கி வந்த காய்கறி சந்தையை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்வது என்று தாசில்தார் காதர் அலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலையில் காய்கறி சந்தை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கடைகளை வைத்திருந்தனர். மிகவிசாலமான இடம் என்பதால் பொதுமக்களும் கூட்ட நெரிசல் இன்றி சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.


Next Story