ஊரக புறக்கடை வளர்ப்பு திட்டத்தில் 115 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள்


ஊரக புறக்கடை வளர்ப்பு திட்டத்தில் 115 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள்
x
தினத்தந்தி 30 April 2020 10:26 PM GMT (Updated: 30 April 2020 10:26 PM GMT)

ஊரக புறக்கடை வளர்ப்பு திட்டத்தில் 115 பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஊரக புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியன், உதவி மருத்துவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தியாகதுருகம் பேரூராட்சி மற்றும் திம்மலை கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட வடதொரசலூர், பீளமேடு, பல்லகச்சேரி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 115 பெண் பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. 

Next Story