திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து அதிக சத்தத்துடன் வெளியேறிய வாயு பொதுமக்கள் அதிர்ச்சி


திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து அதிக சத்தத்துடன் வெளியேறிய வாயு பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 May 2020 5:00 AM IST (Updated: 1 May 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து அதிக சத்தத்துடன் வாயு வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து அதிக சத்தத்துடன் வாயு வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாயு வெளியேறியது

திருவாரூர் அருகே புலிவலம் வடக்கு தெரு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து அதிக சத்தத்துடன் வாயு வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள்

தகவல் அறிந்த திருவாரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாயு வெளியேறுவதை அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். இதற்கிடையில்் ஒன்றியக்குழு தலைவர் தேவா சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பரபரப்பு

ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து அதிக சத்தத்துடன் வாயு வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story