முந்திரி மரங்கள் ஏலம் விடுவதில் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் சமூக விலகலை பின்பற்றாமல் கூடியதால் பரபரப்பு


முந்திரி மரங்கள் ஏலம் விடுவதில் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் சமூக விலகலை பின்பற்றாமல் கூடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2020 5:05 AM IST (Updated: 1 May 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

முந்திரி மரங்கள் ஏலம் விடுவதில் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக விலகலை பின்பற்றாமல் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி, 

முந்திரி மரங்கள் ஏலம் விடுவதில் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக விலகலை பின்பற்றாமல் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முந்திரி மரங்கள் ஏலம்

சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. சுமார் 64 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சேமிப்பு கிடங்கை சுற்றி 10 ஏக்கருக்கு மேல் முந்திரி மரங்கள் உள்ளன. நேற்று இந்த முந்திரி மரங்கள் ஏலம் விடப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஏலம் எடுப்பதற்கு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு முன்பு குவிந்தனர்.

ஏலத்தில் பங்கேற்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நாகை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது காரில் இருந்து இறங்கிய முதுநிலை மண்டல மேலாளர், வாசலில் கூடியிருந்த பொதுமக்களிடம் ஏலம் தொடர்பாக பேசினார்.

வாக்குவாதம்

அப்போது அவர்கள், சேமிப்பு கிடங்கில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் முந்திரி மரங்கள் ஏலம் விடுவதாகவும், இப்பகுதி மக்களுக்கு ஏலம் விடாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள், அந்த ஊரை சேர்ந்த ஒருவருக்கு முந்திரி மரங்களை ஏலம் விட்டனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக விலகலை பின்பற்றாமல் அருகருகே நின்று கூட்டமாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story