வேதாரண்யம் அருகே உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலர் தூவி மரியாதை


வேதாரண்யம் அருகே உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலர் தூவி மரியாதை
x
தினத்தந்தி 1 May 2020 5:14 AM IST (Updated: 1 May 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வேதாரண்யம், 

உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

உப்பு சத்தியாகிரகம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரகத்தின் 90-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அங்கு உள்ள நினைவு தூணில் காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக வேதாரண்யம் வடக்குவீதியில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதரெத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோரின் சிலைக்கு மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி வேதரெத்தினத்தின் பேரன் கேடிலியப்பன், நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கனகராஜ், நகர தலைவர் வைரவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்புசத்தியாகிரக நினைவு தூணுக்கு முன்னாள் எம்.பி. மற்றும் தியாகி வேதரெத்தினத்தின் கொள்ளுப்பேரன் கலாதரன், காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

போராட்டம்

வேதாரண்யத்தில் கடந்த 1930-ம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜி, சர்தார் வேதரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆங்கில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டு உப்பு அள்ளப்பட்டது. இதன் 90-ம் ஆண்டு நினைவாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

Next Story