2 ஆயிரத்து 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
2 ஆயிரத்து 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ம.மு.கோவிலூர், சீலப்பாடி, முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பள்ளப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கான நிகழ்ச்சிகள் ம.மு.கோவிலூர், மாவட்ட விளையாட்டு மைதானம், பெரியகோட்டை சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் 4 இடங்களில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தனது சொந்த செலவில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்து 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கங்காதரணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், கூட்டுறவு அச்சக சங்க தலைவர் ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story