பழனியில் தாழ்வாக பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு


பழனியில் தாழ்வாக பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 April 2020 11:58 PM GMT (Updated: 2020-05-01T05:28:42+05:30)

பழனியில் தாழ்வாக பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு.

பழனி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பழனி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக காலை வேளையில் மட்டுமே பழனி நகர் பகுதிக்கு வருகை தருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் பழனி பகுதியில் குட்டி விமானம் ஒன்று தாழ்வாக பறந்த வண்ணம் இருந்தது. அப்போது விமானம் பறக்கும் சத்தம் கேட்ட பொதுமக்கள், விமானத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்த விமானம் சுமார் 10 நிமிடங்கள் பழனி பகுதியில் வானில் வட்டமிட்டவாறு பறந்தது. இந்த சம்பவம் பழனி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே வேடசந்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 2 முறை குட்டி விமானங்கள் வானில் வட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story