கொரோனாவை தடுக்க விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் மண்டல சிறப்பு குழு அலுவலர் வேண்டுகோள்


கொரோனாவை தடுக்க விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் மண்டல சிறப்பு குழு அலுவலர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 May 2020 8:15 AM IST (Updated: 1 May 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவாமல் தடுக்க அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மண்டல சிறப்பு குழு அலுவலர் கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை, 

கொரோனா பரவாமல் தடுக்க அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என மண்டல சிறப்பு குழு அலுவலர் கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பான மேம்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மண்டல சிறப்பு குழு அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மண்டல சிறப்பு குழு அலுவலர் கருணாகரன் கூறுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் திருப்திகரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து வீட்டில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்” என்றார்.

போர்க்கால நடவடிக்கை

கலெக்டர் ஷில்பா பேசுகையில், “கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நெல்லை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, நெல்லை டவுன், பத்தமடை, வள்ளியூர் உள்ளிட்ட 9 இடங்கள் கண்காணிப்பு வளையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள், மருத்துவ பரிசோதனை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகை, பத்திரிகையாளர்களுக்கான நிவாரண தொகை உள்ளிட்டவைகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story