‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு
x
தினத்தந்தி 1 May 2020 10:30 AM IST (Updated: 1 May 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் அறுவடை செய்யப்படாமல் உள்ள மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

கறம்பக்குடி, 

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் அறுவடை செய்யப்படாமல் உள்ள மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து உள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மரவள்ளி கிழங்கு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் வாங்க ஆட்கள் வராததால் தோட்டத்திலேயே வீணாகும் நிலை இருப்பதை ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கந்தர்வகோட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விவேக், தோட்டக்கலைத்துறை அலுவலர் இலக்கியா, உதவி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் வீரடிபட்டி, முதுகுளம், பழைய கந்தர்வகோட்டை, குளத்து ராயக்கன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு சென்று அறுவடை செய்யப்படாமல் இருந்த மரவள்ளி கிழங்கு தோட்டங்களை ஆய்வு செய்தனர்.

வாகன அனுமதி சீட்டு

பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலை அதிபர்களிடம் பேசி கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் 21 பேருக்கு மரவள்ளி கிழங்குகளை சேலத்திற்கு கொண்டு செல்வதற்கான வாகன அனுமதி சீட்டை வழங்கினர். தற்போது மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் நிலை அறிந்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் உடன் நடவடிக்கை எடுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Next Story