அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம்
அரியலூர் மாவட்டம், வேட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது42) மற்றும் அதே பகுதியில் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர்கள் இருவரும் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான, போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரையின் பேரில், இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார்.
சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள்
இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40). இவர் சின்னவளையம் பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவரை கடந்த மார்ச் மாதம் சில்மிஷம் செய்துள்ளார். இதேபோல் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். இவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story