மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 1 May 2020 10:45 PM GMT (Updated: 2020-05-01T22:46:46+05:30)

மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள் உள்பட 600 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் சலவை தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 600 பேருக்கு நிவாரண உதவியை வழங்கினார்.

யூனியன் அலுவலகத்தில்...

முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் ரகு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், ஒன்றிய கவுன்சிலர்கள் வீரபாண்டி அழகிரி என்ற கோபி, பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள், யனியன் ஆணையாளர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, ஐகோர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஏற்பாட்டில் 250 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Next Story