ஸ்ரீபெரும்புதூரில் முலாம்பழம் சாப்பிட்ட மூதாட்டி சாவு - மகன் குடும்பத்தினர் 8 பேருக்கு தீவிர சிகிச்சை


ஸ்ரீபெரும்புதூரில் முலாம்பழம் சாப்பிட்ட மூதாட்டி சாவு - மகன் குடும்பத்தினர் 8 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 2 May 2020 4:15 AM IST (Updated: 2 May 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் முலாம்பழம் சாப்பிட்ட மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மகன் குடும்பத்தினர் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் முலாம்பழம் சாப்பிட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் செல்வமணி உள்பட 8 பேருக்கும் திடீர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

மூதாட்டி சாவு

இதற்கிடையே செல்வமணியின் தாயார் சொக்கம்மாள் (வயது 80) உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சொக்கம்மாள், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story