கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்- போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை திருவாரூரில் நடந்தது


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்- போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 2 May 2020 4:00 AM IST (Updated: 2 May 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

திருவாரூர்,

திருவாரூரில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

மருத்துவ பரிசோதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் திருவாரூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் திருவாரூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு திருவாரூர் விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை இருக்கிறதா? என பரிசோதனை செய்யப்பட்டது.

கபசுர குடிநீர்

மேலும் வந்திருந்த பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளையும், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் சங்கரன், துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசாருக்கு பரிசோதனையும், விட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

Next Story