ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் மே மாதம் பெற்றுக்கொள்ளலாம் அமைச்சர் காமராஜ் தகவல்


ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் மே மாதம் பெற்றுக்கொள்ளலாம் அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 2 May 2020 4:11 AM IST (Updated: 2 May 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் மே மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் மே மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 17 மற்றும் 18-வது வார்டுகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கொரோனா நோய்த்தடுப்பு கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 4 வாகனங்களின் செயல்பாட்டை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேஷன் பொருட்கள்

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு சில பெரு நகரங்களை தவிர பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து எல்லா நிலையிலும் தமிழக அரசு மக்களை பாதுகாத்து வருகிறது. மே மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் 2, 3 தேதிகளில்(இன்றும், நாளையும்) வழங்கப்படும். 4-ந் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். நாளொன்றுக்கு 150 பேர் வீதம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் மே மாதம் பெற்றுக்கொள்ளலாம்.

புதிய தொற்று இல்லை

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்தில் யாருக்கும் புதிய தொற்று ஏற்படவில்லை. தற்போது வரை திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உள்ளது. அவர்களில் 13 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story