டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு பெண் உள்பட 14 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் கமிஷனர் உத்தரவு
டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெண் உள்பட 14 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனா பாதிப்பில் இறந்தார்.
கடந்த மாதம் 19-ந்தேதி இரவு, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாநகர் கிழக்கு, நியூ ஆவடி சாலை அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஏராளமானோர் வன்முறையில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் 9 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையொட்டி அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 1 பெண் உள்பட 14 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.
14 பேர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.அண்ணாமலை(வயது 32). 2.ஆனந்தராஜ்(33). 3.கோபிநாத்(42). 4.காதர் மொய்தீன்(48). 5.மணி(32). 6.மணிகண்டன்(30). 7.நாகேந்திரன் (29). 8.பால்ராஜ்(34). 9.சங்கீதராஜன்(25). 10.சங்கர்(26). 11.சாரங்கபாணி(38). 12.சோமசுந்தரம்(24). 13.விஜய்(26). 14.நிர்மலா என்ற நிம்மி(38). இவர்கள் 14 பேரும் புழல் மத்திய சிறையில் உள்ளனர்.
Related Tags :
Next Story