தொழிலாளர் தினம்: ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் துணை சபாநாயகர் வழங்கினார்


தொழிலாளர் தினம்: ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் துணை சபாநாயகர் வழங்கினார்
x
தினத்தந்தி 2 May 2020 4:23 AM IST (Updated: 2 May 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் தினத்தையொட்டி ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.

பொள்ளாச்சி,

தொழிலாளர் தினத்தையொட்டி ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு பொள்ளாச்சியில் அ.தி.மு.க. சார்பில் இலவச மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மளிகை பொருட்களை வழங்கினார்.

குமரன் நகர், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 900 ஆட்டோ டிரைவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கோவை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேம்ஸ்ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குருசாமி, நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அ.தி.மு.க. பிரமுகர் அக்னீஸ் முகுந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அத்தியாவசிய பொருட்கள்

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் சுரேஷ்குமார், துணைதலைவர் பாக்கியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், அ.தி.மு.க. நிர்வாகிகள் தண்டபாணி ,சதீஷ், மகில்ராஜ், ஜாகீர்உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசில் பொதுமக்களுக்கு இலவச அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், வடக்கு ஒன்றிய துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ரத்தினகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உதவித்தொகை

வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தலைமை தாங்கி உதவித்தொகைகளை வழங்கினார்.

110 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் உதவித்தொகை மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் மயில்கணேசன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. மீனவர் அணி சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் பொருட்களை வழங்கினார். இதில் நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story