திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல வாகன வசதி


திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல வாகன வசதி
x
தினத்தந்தி 2 May 2020 5:01 AM IST (Updated: 2 May 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் தெரிவித்தார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைக்கு செல்ல தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் தெரிவித்தார்.

கர்ப்பிணிகள்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற அச்சம் அடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக மாவட்ட சுகாதார பணிகள் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:-

தனி வாகன வசதி

திருவாரூர் மாவட்டத்தில் இந்த மாதம் (மே) 1,528 கர்ப்பிணி பெண்கள் பிரசவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களை 15 நாட்களுக்கு முன்னதாகவே மருத்துவமனைகளில் சேரும்படி அறிவுறுத்தி இருந்தோம். அதன்படி 361 கர்ப்பிணிகள் தற்போது வரை பிரசவித்துள்ளனர். மேலும் அவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல தனி வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கர்ப்பிணி பெண்களையும் அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 8 நாட்களாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நோயாளி யாருமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக சென்று வர தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு வர அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story