வள்ளியூர் அருகே சந்தைக்கு வந்த அதிசய வாழைத்தார் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
வள்ளியூர் அருகே சந்தைக்கு விற்பனைக்கு வந்த அதிசய வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
வள்ளியூர்,
வள்ளியூர் அருகே சந்தைக்கு விற்பனைக்கு வந்த அதிசய வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
சந்தை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சியில் வாழைக்காய் சந்தை உள்ளது. இங்கு நெல்லை மற்றும் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை சார்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உற்பத்தியாகும் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதிசய வாழைத்தார்
அதன்படி நேற்று ஏர்வாடி அருகே உள்ள வன்னியன் குடியிருப்பை சேர்ந்த விவசாயி மோகன்குமார ராஜா என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த செவ்வாழைத்தார்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தார்.
வழக்கமாக செவ்வாழைத்தார் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இவர் கொண்டு வந்த வாழைத்தார்களில் ஒரு வாழைத்தார் பாதி சிவப்பு நிறமாகவும், பாதி பச்சை நிறமாகவும் காணப்பட்டது. இந்த அதிசய வாழைத்தாரை சந்தைக்கு வந்த வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story