முன்குறுவை சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை பெருங்காலில் தண்ணீர் திறப்பு


முன்குறுவை சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை பெருங்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 2 May 2020 7:43 AM IST (Updated: 2 May 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

முன்குறுவை சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை பெருங்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

அம்பை, 

முன்குறுவை சாகுபடிக்காக மணிமுத்தாறு அணை பெருங்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

மணிமுத்தாறு அணை

நெல்லை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி மணிமுத்தாறு அணை பெருங்கால் மதகு திறக்கப்பட்டது. இதன் மூலம் அம்பை தாலுகாவை சேர்ந்த ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 2756.62 ஏக்கர் பாசன பரப்பு பாசன வசதி பெறும்.

நேற்று முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி வரை 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு நடந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி செயற்பொறியாளர் பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டு மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து விட்டனர்.

விவசாயிகள் மனு

நிகழ்ச்சியில் உதவி என்ஜினீயர்கள் மகேஸ்வரன், சுஷ்மி பென்சியா, வினோத்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் முத்துப்பாண்டி, பாபநாசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி சிமெண்டு தடுப்பு அமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Next Story