85 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கலெக்டர் ஷில்பா வழங்கினார்
தமிழக அரசு நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறது.
நெல்லை,
தமிழக அரசு நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 85 நபர்களுக்கான உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், “தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை தேவைகளை பிற மாநிலங்களை விட சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பாதுகாப்பு பொருட்களை வழங்கி வருகிறது. கிருமி நாசினி, கையுறை, முகவுறை, காலுறை, முழங்கால் உறை, கை துடைக்கும் காகிதம் ஆகிய 6 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 85 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் தங்கியுள்ள வெளியே வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காத பட்சத்தில் 0462- 2501034 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story