நெல்லை மாநகர பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்திய போலீசார்


நெல்லை மாநகர பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 2 May 2020 8:04 AM IST (Updated: 2 May 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகர பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.

வாகன சோதனை தீவிரம்

நெல்லை மாநகர பகுதியில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்தை முன்னிட்டும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவின் படி நேற்று வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பெரியசாமி தலைமையில் அந்த பகுதியில் வாகன சோதனை செய்யப்பட்டது.

நெல்லை டவுன் பகுதியில் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அபராதம்

நேற்று வழக்கத்தை விட கார், மோட்டார் சைக்கிள் அதிகமாக வந்தன. காரில் வந்தவர்களுக்கு பாஸ் இருக்கிறதா? என போலீசார் சோதனை செய்தனர். அதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா? என சோதனை செய்தனர்.

நெல்லை வண்ணார்பேட்டை, டவுன் பகுதியில் வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தினர். அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கும், நிறம் மாறி அனுமதி அட்டை வைத்து இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் அணியாதவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story