திருச்சி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்


திருச்சி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 2 May 2020 8:19 AM IST (Updated: 2 May 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

திருச்சி, 

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

கொரோனா நோயாளிகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வார்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 51 பேர் கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், ஏற்கனவே 46 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல மேலும் குணமடைந்த 6 பேர், நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். வீடு திரும்பியவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் ஆவர்.

11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

தற்போதைய நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என 11 பேர் கொரோனா சிறப்பு வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story