ஆலங்காயத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு


ஆலங்காயத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 2 May 2020 10:30 AM IST (Updated: 2 May 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆய்வு.

வாணியம்பாடி,

ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 15 வார்டுகளிலும் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.

முன்னதாக பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேஷ், இளநிலை பொறியாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவற்றை மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா வழங்கி, பேரூராட்சி சார்பில் பணியாளர்களுக்கு உணவு வழங்குவதைப் பார்வையிட்டார்.

Next Story