விலக்கு அளிக்கப்பட்டும் வாகன போக்குவரத்து இல்லாததால் சூளையில் தேக்கமடைந்த செங்கற்கள்


விலக்கு அளிக்கப்பட்டும் வாகன போக்குவரத்து இல்லாததால் சூளையில் தேக்கமடைந்த செங்கற்கள்
x
தினத்தந்தி 2 May 2020 5:15 AM GMT (Updated: 2 May 2020 5:15 AM GMT)

விலக்கு அளிக்கப்பட்டும் வாகன போக்குவரத்து இல்லாததால் செங்கற்கள் சூளையில் தேக்கம் அடைந்துள்ளது.

புதுக்கோட்டை, 

விலக்கு அளிக்கப்பட்டும் வாகன போக்குவரத்து இல்லாததால் செங்கற்கள் சூளையில் தேக்கம் அடைந்துள்ளது.

செங்கற்கள் தேக்கம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கில் சில பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அந்த வகையில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் செங்கற்களை கொண்டு செல்வதற்கு வாகன போக்குவரத்து இல்லாதது பெரும் பாதிப்பாக உள்ளது. இது குறித்து புதுக்கோட்டையில் செங்கல் தயாரிக்கும் தொழில் செய்து வரும் மாரியப்பன் கூறியதாவது, “திருவப்பூர், அடப்பக்காரசத்திரம், எல்லைப்பட்டி, வடமலாபுதூர், திருவேங்கைவாசல், தாவுதுமில், வடசேரிப்பட்டி, முத்துடையான்பட்டி, மேலூர், எம்.கே. நகர் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 80-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. ஒருகாலத்தில் செங்கல் தொழில் லாபகரமாக இருந்தது. ஆனால் தற்போது லாபம் பார்ப்பது கடினமாக உள்ளது. காரணம் செங்கல் செய்வதற்கு தகுந்த மண் கிடைப்பதில்லை. செங்கலை சுடுவதற்கான விறகு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தயாரித்த செங்கலை கொண்டு செல்வதற்கான வண்டி வாடகையும் அதிகரித்துள்ளது.

அரசு உதவ வேண்டும்

ஊரடங்கால் எந்த கட்டிடத்தொழிலும் நடக்காத நிலையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உற்பத்தி செய்து வைத்திருந்த செங்கற்களையும், வாகன போக்குவரத்து இல்லாததால் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்தவர் களுக்கும் வினியோகம் செய்ய முடியாமல் தேங்கி உள்ளது. மேலும் வேலை இல்லா நேரத்திலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே தற்போது உள்ள நிலையில் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. எங்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு அரசு எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.

Next Story