பொம்மனப்பாடி ஊராட்சி பகுதியில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர்


பொம்மனப்பாடி ஊராட்சி பகுதியில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 2 May 2020 11:32 AM IST (Updated: 2 May 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

பொம்மனப்பாடி ஊராட்சி பகுதியில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர், 

பொம்மனப்பாடி ஊராட்சி பகுதியில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கழிவுநீர் தேங்கி நிற்கிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொம்மனப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால்கள் சரியாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கிராமங்களில் சாலை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. குடிநீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதிகளில் சரியான பராமரிப்பு இல்லையாம்.

ஊரடங்கில் பொம்மனப்பாடி ஊராட்சியில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி...

இதேபோல் பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட சத்திரமனை ஊராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் குப்பை தொட்டிகள் சேதமடைந்து உள்ளது. ஆனால் புதிதாக வந்துள்ள குப்பை தொட்டிகள் கிராமத்தில் தடுப்புகள் ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தார் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் சத்திரமனை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாலிபால் விளையாடி வருகின்றனர்.

பெரியவர்கள் கோவில் மற்றும் மரத்தடியில் ஒன்றாக அமர்ந்து பேசி பொழுதை கழித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப் பில் உள்ளனர்.

Next Story