திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2020 10:45 PM GMT (Updated: 2 May 2020 10:18 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கர்ப்பிணிகள் உள்பட ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்குன்றம், 

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த 34 வயதான கர்ப்பிணிக்கு கடந்த மாதம் வளைக்காப்பு முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டார். அவரது கணவர், பெற்றோர் உள்பட 6 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

செங்குன்றத்தைச் சேர்ந்த ஒருவர் கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாது. செங்குன்றத்தை அடுத்த கிரான்ட் லைன் பகுதியை சேர்ந்த மற்றொருவர், ராயபுரம் மண்டலத்தில் சாலை பணியாளராக வேலை செய்து வந்தார். அடிக்கடி ராயபுரம் சென்று வந்த அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 2 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

திருத்தணி

திருத்தணி தாலுகா ஆற்காடு குப்பம் அருகில் உள்ள இலுப்பூரில் மாற்றுத்திறனாளி கர்ப்பிணிக்கு கொரோனா உறுதியானதால் அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் ஒருவரும், திருமழிசை பகுதியில் ஒருவரும், கரையான்சாவடி பகுதியில் ஒருவரும் என மேலும் 3 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 68 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Next Story