காஞ்சீபுரம் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிப்பு - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மே 4-ந் தேதி முதல் 17-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை கீழ் காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கீழ் கண்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்
பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஊராட்சிகள், நந்தம்பாக்கம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிகளில் வரப்பெற்ற கோவிட் 19, பாசிட்டிவ் கேஸின் படி கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ளதால் எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
இணையதளம் மூலம் மே 5-ந் தேதிக்குள்...
தமிழக முதல்-அமைச்சரின் செய்தி குறிப்பு நாள் மே 2-ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், பணிகள் மேற்கொள்ள இணையதளம் மூலம் மே 5-ந் தேதிக்குள் விண்ணப்பம் செய்து மே 6-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் செயல்பட முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story